2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

சுரங்கத்துக்கு அருகில் இருந்து சடலம் மீட்பு

Kogilavani   / 2021 ஜனவரி 14 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா, ஆர்.ரமேஸ்

ஹட்டன்  -சிக்கலை சுரங்கத்துக்கு அருகிலிருந்து, பெண்ணொருவரின் சடலத்தை, ஹட்டன் ரயில் நிலைய பாதுகாவலாளர்கள், நேற்று (13) இரவு  மீட்டுள்ளனர்.

ஹட்டன் தோட்டத்தைச் சேர்ந்த சிவசாமி மாரியம்மாள் (வயது 72) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நானுஓயாவிலிருந்து நாவலப்பிட்டியை நோக்கிப் பயணித்த சரக்கு ரயிலில்  மோதி இப்பெண் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

பிரேதப் பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X