2025 மே 19, திங்கட்கிழமை

சுற்றித் திரியும் நாகத்தால் தோட்ட மக்கள் அச்சத்தில்

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 15 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் எச். எம். ஹேவா

நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான தோட்டத்தில்  நாகப்பாம்பு ஒன்று சுற்றித் திரிவதால், தோட்டத் தொழிலாளர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

ஏழு அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று தோட்டத்தில் சுற்றித் திரிவதாகவும், அதனால் தாம் அன்றாட தொழிற்  செயற்பாடுகளை அச்சத்துடன் முன்னெடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

குளவி, சிறுத்தை என  பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாகியுள்ள தாம்  தற்போது, விஷப் பாம்புகளின் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகியுள்ளதாக  தெரிவிக்கின்றனர்.

எனவே, இந்த நாகப்பாம்பை பிடித்து வேறு இடத்திற்கு கொண்டு செல்ல உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X