2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

சுற்றிவளைப்பில் ஒருவர் கைது

Freelancer   / 2023 மார்ச் 10 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

தலவாக்கலை - கிறேட்வெஸ்டன் மலைத்தோட்டத்திலுள்ள காட்டுப் பகுதியில் மிக நீண்ட நாட்களாக மிகவும் இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தி இடம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு இவ்விடத்தை சுற்றிவளைத்து  125 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பெருமளவிலான உபகரணங்களுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை இன்று (10) நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X