Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 நவம்பர் 21 , மு.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
நல்லத்தண்ணி நகரத்திலுள்ள சுற்றுலா சபையில் பதிவுச் செய்யப்பட்டுள்ள சுற்றலா ஹோட்டல்கள் ஐந்துக்கு மதுபானம் (பியர், வைன்) விற்பனைச் செய்வதற்கு கலால் திணைக்களம் அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது.
சுற்றுலா வருவோருக்கு தங்களுடைய சுற்றுலா ஹோட்டல்களில் மதுபானம் விற்பனைச் செய்வதற்கு அனுமதியளிக்குமாறு அந்த ஐந்து ஹோட்டல்களின் உரிமையாளர்களும் சுற்றுலா சபைக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
பல வருடங்களுக்கு முன்னர் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே இந்த அனுமதிப்பத்திரம் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என ஹோட்டல்களின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
அவ்வாறான ஹோட்டல்களில், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமன்றி, சிவனொளிபாத மலைக்கு வரும் யாத்திரிகர்கள் மற்றும் அண்மித்திருக்கும் தோட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் மதுபானம் விற்பனைச் செய்யப்படுகின்றது என்று நல்லத்தண்ணி பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சிவனொளிபாதமலைக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள், மதுபானம் எடுத்துவருவதை தடுக்கும் வகையிலும் அவ்வாறு எடுத்து வருபவர்களை கைது செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025