Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
ஹட்டன் டிக்கோயா வீதியில் காமினி புர பகுதிக்கு செல்லும் வழித்தடத்தில் கட்டப்பட்ட நான்கு மாடி கட்டிடம் முழுமையாக தகர்க்குமாறு ஹட்டன் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் இடிக்கப்படும் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், அந்த இடத்தில் பணிபுரிந்த இருவர் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 30ம் திகதி கட்டிடம் இடிக்கப்பட்டது.ஆனால் கட்டிடம் இடிக்கும் பணி மேலும் ஒரு மாதம் தாமதமாகி வியாழக்கிழமை (14) கட்டிடம் இடிக்கும் போது ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இந்த நிலைமைகள் குறித்து கேட்ட போது, ஹட்டன் வடக்கு கிராம அதிகாரி இந்த கட்டிடத்தை இடிக்க நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் எதிர்வரும் வௌ்ளிக்கிழமைக்குள் (30) இடிக்க வேண்டும் என்று எஸ்.சுரேஸ் கூறினார்.
ஆனால் இக்கட்டிடத்தை இடிக்க மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கபட்டுள்ளதால், வியாழக்கிழமை (14) இக்கட்டடத்தின் ஒரு பகுதியை இடிக்கும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், அதன் அடிப்படையில் இக் கட்டிடத்தை உடனடியாக இடித்துத் தள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago