Editorial / 2018 ஜூன் 24 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம் மற்றும் வாழும் கலை அமைப்பு ஆகியனவற்றின் ஏற்பாட்டில், சர்வதேச யோகா தினம் பொகவந்தலாவை சென். மேரிஸ் கல்லூரி விளையாட்டு மைதானத்தில், கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் தலைமையில் நேற்றையதினம் நடைபெற்றது.
மலையக மக்களின் உடல், உளச் செயற்பாடுகளை ஊக்குவித்து, ஆரோக்கியமானதும் மகிழ்ச்சிகரமானதுமான வாழ்க்கையை ஏற்படுத்தும் நோக்கில், இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில், மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அனுபவம் வாய்ந்த யோகா பயிற்றுநர்களால் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்தப் பயிற்சியின் போது தியானம், உடற் பயிற்சி, மூச்சுப் பயிற்சி உட்பட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந்த யோகா பயிற்சியில், சென். மேரிஸ், ஹொலி ரோசரி, கெம்பியன் தமிழ் வித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளின் மாணவர்கள் பிரதேசவாசிகள் எனப் பலர் பங்கேற்றனர்.
11 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
57 minute ago
1 hours ago