2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

செய்யும் வேலைகளை இ.தொ.கா பட்டியலிடுவதில்லை

R.Maheshwary   / 2021 நவம்பர் 08 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.சுந்தரலிங்கம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேர்தல் காலப்பகுதியில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது எனத் தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளருமான எம்.ரமேஸ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்களுக்காக செய்யும் வேலைகளை ஒருபோதும் பட்டியல் இடுவதில்லை என்றார்.

நேற்று (07) கொட்டகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சுமார் ஒரு வருட காலமாகின்றது மலையகத்தில் எந்த வேலைத்திட்டங்களும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என பலர் விமர்சித்து வருகின்றனர். ஆனால் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.

பல காபட் பாதைகள் பூர்த்தி செய்யப்பட்டு இன்றும் கூட மக்கள் பாவனைக்காக  ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானால் கையளிக்கப்பட்டுள்ளன. இன்றும் கூட பல காபட் பாதைகள் கையளிக்கப்படவுள்ளன.

அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஐயா காலத்திலும் சரி ஜீவன் தொண்டமான் காலத்திலும் சரி நாங்கள் செய்யும் சேவைகளை மக்களை சென்றடைய வேண்டும் என்பது தான் எமது ஒரே நோக்கம் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X