2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

செவிலியர் பயணித்த கார், விபத்து

Janu   / 2025 ஏப்ரல் 30 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டனில் இருந்து தனது கடமைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு காரில் பயணித்த செவிலியர் விபத்துக்குள்ளான சம்பவம் ஹட்டன்- பொகவந்தலாவ பிரதான வீதியில் உள்ள நோர்வூட் கெண்தகொல்ல தோட்டம் பகுதியில்  புதன்கிழமை (30) அதிகாலை  இடம்பெற்றுள்ளது.

 காருக்கு முன்பாக பயணித்த தனியார் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது, எதிர் திசையில் வந்த லொறியில்  மோத முயன்ற நிலையில் காரை தேயிலைத் தோட்டத்தை நோக்கி திருப்பியதாகவும் இதன் போது அவரது கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி 60 அடி பள்ளத்தில்  கவிழ்ந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த பெண் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கார் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 ரஞ்சித் ராஜபக்ஷ

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .