Janu / 2024 ஒக்டோபர் 15 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது தாயின், சுமார் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐந்து பவுன் தங்க சங்கிலியை திருடிய மகனை ஹட்டன் பொலிஸார் திங்கட்கிழமை(14) பிற்பகல் கைது செய்துள்ளனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் தோட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டின் அலமாரியில் இருந்த ஐந்து பவுன் தங்க நகை திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.
அதனடிப்படையில் மேற்கொண்ட விசாரணையின் போது முறைப்பாடு பதிவு செய்த பெண்ணின் மகன், தங்க நகையை ஹட்டன் நகரில் உள்ள தனியார் அடகுக் கடையொன்றில் ஒன்பது இலட்சம் ரூபாவுக்கு அடகு வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு பெற்றுக்கொண்டு ஒன்பது லட்சத்தில் ஒரு இலட்சம் ரூபாவை அவரது நண்பருக்கு வழங்கியுள்ளதாகவும் மீதி பணத்தை சந்தேகநபர் முழுமையாக செலவழித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் தற்போது தாய் வீட்டுக்குப் பக்கத்தில் வசித்து வருவதுடன் அவரின் மனைவி வெளிநாட்டில் தொழில் செய்து வருவதாகவும் சந்தேக நபர் அதிகளவில் மதுவுக்கு அடிமையானவர் எனவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை செவ்வாய்க்கிழமை (15) அன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

8 minute ago
36 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
36 minute ago
59 minute ago
2 hours ago