Editorial / 2018 ஓகஸ்ட் 06 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
மலையகத்துக்கு மட்டுமன்றி, வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கும் சேவைசெய்கின்ற ஒரு தலைவராகவும், சௌமியமூர்த்தி தொண்டமானுடைய ஆசைகள், எண்ணங்கள், சிந்தனைகளைச் செயற்படுத்துகின்ற ஒரு செயற்பாட்டாளராகவும், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனை தான் பார்ப்பதாக, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உபதலைவருமான வே.இராதாகிருஷ்ணனுக்கு கௌரவிப்பு விழா, ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில், நேற்று (05) காலை 10.00 மணிக்கு, நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், "கல்வி அமைச்சர் இராஜாங்க இராதாகிருஷ்ணன், கல்வியில் மலையகத்தில் மட்டும் புரட்சியை ஏற்படுத்தவில்லை. வடக்கு, கிழக்கிலும் கூட அவர் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்" என்றும் தெரிவித்தார்.
25 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
33 minute ago
2 hours ago