Sudharshini / 2016 ஜூன் 02 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா, மு.இராமச்சந்திரன்
வீட்டுத் தோட்டத்தில் புதைப்பதற்கு தயாராகவிருந்த சிசுவின் சடலத்தை தலவாக்கலை பொலிஸார் பொறுப்பேற்ற சம்பவமொன்று நேற்று(2) தலவாக்கலையில் இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலை, மிடில்டன் தோட்டத்தில் இறந்த நிலையில் பிறந்த சிசுவை, உறவினர்கள் வைத்தியசாலையில் ஒப்படைக்காது தமது வீட்டுக்கே எடுத்துச் சென்றுள்ளதுடன் சடலத்தை வீட்டின் பின்புறத்திலுள்ள தோட்டத்தில் புதைப்பதற்கு முயற்சித்துள்ளனர்.
இது தொடர்பில் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சிசுவின் சடலத்தை பொறுப்பேற்றுள்ளதுடன் அதனை மீண்டும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சிசு இறந்தே பிறந்துள்ளது என வைத்திய பரிசோதனையில் தெரியவந்ததைத் தொடர்ந்து பொலிஸார் சடலத்தை மீண்டும் பெற்றோரிடமே ஒப்படைத்துள்ளதுடன் அதனை தோட்ட பொதுமயானத்தில் புதைக்குமாறு பணித்துள்ளனர்.
12 minute ago
25 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
25 minute ago
36 minute ago
2 hours ago