2024 மே 18, சனிக்கிழமை

சா/த பரீட்சார்த்திகள் (மாணவிகள்) இருவர் மாயம்

Editorial   / 2024 மே 15 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றுடன் நிறைவடையும் கல்விப்பொதுத் தராதர சாதாரணத் பரீட்சை மத்திய நிலையத்துக்கு வருகைதந்த பாடசாலை மாணவிகள் இரவர்,  வீட்டுக்குத் திரும்பவில்லை என, அந்த மாணவிகள் இருவரின் பாதுகாவலர்கள் முறைப்பாடு செய்துள்ளனர் என கினிகத்ஹேன பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்விரு மாணவிகளும் செவ்வாய்க்கிழமை (14)  பரீட்சைக்குத் தோற்றுவதற்காக, பரீட்சை மத்தியநிலையத்துக்கு வந்துள்ளனர். அதிலொரு மாணவி, பெற்றோருடன் பரீட்சை மத்திய நிலையத்துக்கு வந்துள்ளனர் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்விரு மாணவிகளும் நண்பிகள் என்றும், பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் பரீட்சை மத்திய நிலையத்துக்கு அண்மையில் இவ்விருவரும் நீண்டநேரம் கதைத்துக்கொண்டிருந்ததை பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகள் பலரும் கண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  
ரஞ்சித் ராஜபக்ஷ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .