Sudharshini / 2015 செப்டெம்பர் 20 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா பகுதியில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வகையில் சூழலை அசுத்தமாக வைத்திருந்த 13 பேருக்கு எதிராக வழங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் 48 பேருக்கு எச்சரிக்கைக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பி.ஏ.பாஸ்கரன், நேற்று(20) தெரிவித்தார்.
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தையொட்டி, மஸ்கெலியா பகுதியில் பொலிஸ் திணைக்களம், கிராமசேவையாளர்கள், பிரதேச செயலக அதிகாரிகள் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போதே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இரண்டு தோட்டங்களின் தோட்ட முகாமையாளர்களுக்கும் எச்சரிக்கைக் கடிதங்கள்; வழங்கப்பட்டுள்ளன.
மொக்கா தோட்டம், ரைட்அக்கரை தோட்டம், மஸ்கெலிய நகர பிரதேசம், கிராப்பு தோட்டம், காட்டு மஸ்கெலியா தோட்டம், ராசாதோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 13 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
8 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
1 hours ago