2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சிறுவனை வன்புணர்வு: குடும்பஸ்தருக்கு கடூழிய சிறை

Kogilavani   / 2017 மார்ச் 06 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா          

14 வயது சிறுவனை,  வன்புணர்வுக்கு உட்படுத்திய  56 வயது நபருக்கு, மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி இனோகா ரணசிங்க, 12 வருட கடூழிய சிறைத்தண்டனை  விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை,  இழப்பீடாக செலுத்தும் படியும்  இழப்பீடு செலுத்தப்படாத பட்சத்தில் மேலும் மூன்று வருடங்களுக்கு, கடூழியச் சிறைத்தண்டனை நீடிக்குமென்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேற்படி நபர்,2008ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி, 14 வயது  சிறுவனை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், கைது செய்யப்பட்டு, பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இவ்வழக்கு, மீண்டும் இன்று (06) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே, மேற்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X