Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஏப்ரல் 24 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் பாராளுமன்ற உறுப்பினர், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன்தொண்டமான் தலைமையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சார கூட்டம்,டிக்கோயா, வனராஜா,போடைஸ்,பட்டல்கள, கெர்கஸ்வோல்ட், மோராஆகியபகுதிகளில் புதன்கிழமை (23) அன்று இடம்பெற்றது.
இதன்போது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதேஇவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். நாட்டின் ஜனாதிபதி அவர்கள் தேர்தல் காலங்களில் மக்கள்மத்தியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.
ஆனால் தற்போது அவர் வாக்குறுதிகளை மறந்து எதிர்கட்சி தலைவர்போன்று செயற்பட்டு வருகின்றார்.
ஜனாதிபதி தேர்தல் காலங்களில் தோட்டதொழிலாளர்களுக்கு கனிசமான சம்பளஅதிகரிப்பை வழங்குவதாக உறுதியாக அறிவித்ததுடன், வரவு செலவு திட்டவாசிப்பிலும் தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது அனைத்தையும் மறந்துதோட்டக் கம்பெனிகளுடன் கலந்துரையாடி முடியுமான அளவு1700 ரூபாய்நாட்சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக அறிக்கை விடுத்துள்ளார்.
இதனைஏமாற்று நாடகமாகவே புரிந்து கொள்ள வேண்டும். நான் அமைச்சராக இருந்த காலப்பகுதிகளில் ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக என்னால் முடிந்தளவிலான வேலைகளை மக்கள் நலனுக்காக செய்திருந்திருந்தேன்.
தற்போது ஜனாதிபதியால் வரவு செலவு திட்டத்தினூடாக மலையகப் பெருந்தோட்ட பகுதிகளுக்கு நிதி ஒதுக்கீட்டில் அநீதி இழைக்கப்பட்ட கண் துடைப்பாகவே காணப்படுகின்றது.
கடந்த வருடத்தில் நாங்கள் அரசாங்கத்தில் இருந்த போது அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் பெருமளவிலான நிதி ஒதுக்கீடு மேற்கொண்டிருந்ததை யாரும் மறந்து விட முடியாது என ஜீவன் தொண்டமான் மேலும்தெரிவித்தார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பானது நிரந்தர தீர்வாக அமையாது, மாறாக நாட் கூலி முறைமை இல்லாதொழிப்பது நிரந்தர தீர்வாகும்.
இப்பிரசார கூட்டத்தில் நுவரெலியா மாவட்டநாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.கா பிரதிதலைவர்கணபதி கனகராஜ், முன்னாள் நோர்வூட் பிரதேச சபை தலைவர் குழந்தைவேல் ரவி மேலும் பிரதேசத்தின் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், காரியாலய உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
23 minute ago
27 minute ago
5 hours ago
17 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
27 minute ago
5 hours ago
17 Aug 2025