Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 நவம்பர் 17 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அக்கறைக்காட்ட வேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
'நல்லாட்சிக்கு ஆதரவு அளித்த மலையக மக்களுக்கு, தேர்தல் காலங்களின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் சாத்தியமடைந்துள்ளனவா?, நல்லாட்சிக்கு காரணமான மக்களுக்கு கிடைத்தது ஒன்றும் இல்லை. அம்மக்கள் தற்போது ஏமாற்றப்பட்டவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர், 'புதிய ஜனாதிபதி தெரிவுக்கும் புதிய அரசாங்க தெரிவுக்கும் பாரிய அளவிலான ஒத்துழைப்புக்களை மலையக மக்கள் வழங்கியுள்ளனர். இந்நிலையில் தேர்தல் காலங்களில் இவர்களிடம் கூறப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நடைமுறையில் சாத்தியம் அடைந்துள்ளதா என்று கேட்டால் அது கேள்வி குறியாகவே உள்ளது' என்றார்.
'சில விடயங்கள் நடைபெற்றாலும் பல விடயங்கள் நடைமுறையில் இல்லை. குறிப்பாக பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினை குறித்து அரசாங்கம் கம்பனிகளிடம் பேசி தீர்மானித்து முடிவெடுக்கப்படுமாக கூறிய போதும் அவை சாத்தியப்படவில்லை. தீபாவளியையொட்டி தோட்ட தெழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணத்தை அதிகரித்து தருவதாக கூறியபோதும் அவையும் நடைமுறையில் சாத்தியமானதாக இருக்கவில்லை.
சில தோட்;டங்களில் முழுமையதாக வழங்கப்பட்டபோதும் பெரும்பாலான தோட்டங்களில் அவை வழங்கப்படவில்லை. நாங்கள் கேட்டதைவிட குறைவாகவே கம்பனிகள் தீபாவளி முற்பணத்தை வழங்கினர்.
அரச தோட்டங்களில் (துநுனுடீ) தீபாவளிக்கு முதல் நாள் இரவு, 4,000 ரூபாய் வழங்கியுள்ளனர். பெருந்தோட்ட மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். பொருட்களின் விலை அதிகரிப்பால் குறைந்த வருமானம் பெறுகின்றவர்கள் பாதிக்கப்பட்டும் வருகின்றனர். அபிவிருத்திகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படவும் இல்லை. இந்த மக்களின் பிரதிநிதி என்ற வகையில் இவர்களுக்கு பிரச்சினை வரும்போது அது தொடர்பில் கவனம் எடுக்க வேண்டியது எங்களின் கடமையாகும்.
அதேபோல் நல்லாட்சி அரசாங்கம், இந்த மக்களின் பிரச்சனைகள் குறித்து கவனம் எடுத்து தீர்த்து வைக்க வேண்டியது கட்டாயமானதாகும். தோட்ட மக்களை பகடை காய்களாக தங்களின் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ள நாங்கள் ஒரு போதும் இடமளிக்க போவதில்லை. மேற்படி செயற்பாடுகள் மலையக மக்களுக்கு நல்லாட்சி துரோகம் விளைத்துள்ளதா? என்று எண்ணத் தோன்றுகிறது.
எனவே, ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக இந்த மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வினை பெற்று தர வேண்டும்' என கோரிக்கை விடுகின்றேன். அதேபோல் இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அழுத்ததையும் கொடுப்பேன்' என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago