2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

“ஜீவன் தொண்டமான் - சிவகங்கை எம் .பி இடையில் சந்திப்பு ”

Janu   / 2025 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், இந்தியாவின் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி பி. சிதம்பரத்தை அண்மையில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தியா பயணத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு விஜயத்தின்போது சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) உறுப்பினரும், தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் (TNTA துணைத் தலைவருமான திருவாளர் கார்த்தி பி. சிதம்பரத்தை சந்தித்துள்ளார். 

சிவகங்கை தொகுதியின் மானகிரியில் இடம்பெற்ற இச்சந்திப்பானது சுருக்கமானதாக இருந்தாலும் மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்ததாக கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான் இந்தியா-இலங்கை பரஸ்பர விடயங்கள் குறித்தும், மேலும் பல முக்கிய விஷயங்கள் சார்ந்தும் இருவரும் பயனுள்ள கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

செ.தி. பெருமாள்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .