2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

ஜோடியை கண்டால் அழையுங்கள்

Editorial   / 2023 செப்டெம்பர் 14 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கண்டி, கட்டுகஸ்தோட்டை வீதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றின் உரிமையாளர் மற்றும் அவரின்  மனைவியிடம் இருந்து காணியைப் பெற்றுத் தருவதாகக் கூறி 5 கோடி ரூபாய்க்கும் அதிக பணத்தை மோசடி செய்த கண்டி விசேட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற 9 முறைப்பாடுகளுக்கு அயைம விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முத்துதந்திரிகெ ஜூட் பெர்னாண்டோ மற்றும் ஸ்ரீமதி திஸ்ஸ குமாரி ஆகிய சந்தேகநபர்களின் புகைப்படங்களை விசாரணைப் பிரிவினர் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 0718591045 அல்லது 0812222222 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X