Editorial / 2020 ஏப்ரல் 08 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா, எஸ்.சதிஸ், ரஞ்சித் ராஜபக்ஷ
டிக்கோயா பிரதேசத்தில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடித் திரிந்த நபரொருவர், ஹட்டன் பொலிஸார், பிரதேச பொதுசுகாதார பரிசோதகர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு, டிக்கோயா வைவத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர், மேலதிகச் சிகிச்சைக்காக, கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி நபர், டிக்கோயா பகுதியில் சுற்றித்திரிவதைக் கண்ட பிரதேச மக்கள், வழங்கியத் தகவலுக்கமைவாக, பொலிஸாரும் பொதுசுகாதார பரிசோதகர்களும் இணைந்து, அந்நபரை, செவ்வாய்க்கிழமை (8) இரவு மீட்டுள்ளதுடன், அவசர அம்புலன்ஸ் சேவையினூடாக, டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
கடவத்த ஹியலபியன்வில பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே, இவ்வாறு டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மேற்படி நபர், கொழும்பு கம்பனி வீதியில், கூலி வேலை செய்பவர் என்று தெரியவந்துள்ளது.
கொழும்பில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதையடுத்து, கண்டி பகுதிக்கு சென்ற அவர், ஐந்து நாள்களுக்கு முன்னர், ஹட்டன் பிரதேசத்துக்கு வருகைதந்து, ஹட்டன் பிரதேசமெங்கும் சுற்றித்திரிந்ததாகத் தெரியவருகிறது.
குறித்த நபருக்கு இருமல் உட்பட கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதைடுத்து, பொலிஸாரும் சுகாதார பரிசோதகர்களும் அவரை, டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த நபர், மேலதிகச் சிகிச்சைக்காக, கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று தெரியவருகிறது.


27 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
4 hours ago
5 hours ago