Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 செப்டெம்பர் 15 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொகவந்தலாவை டின்சின் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் பொன்.பிரபாகரனுக்கு பல தரப்பினராலும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில். பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள அதிபர் , ஹட்டன் கோட்டக்கல்வி காரியாலயம், இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளார்.
அதிபர் பிரபாகரன், மாணவிகளை கண்டிக்கும் போது கடுஞ்சொற்களையும், மிக கேவலமான வார்த்தைகளையும் பிரயோகித்துள்ளார் என்றும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
அந்த பிரதேசத்தில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் குழுவினருடன் மாணவிகள் சிலரை தொடர்பு படுத்தி அதிபர் பேசியுள்ளார். மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் ஹட்டன் கல்வி வலய பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து பாடசாலைக்கு விஜயம் செய்த பணிப்பாளரிடம் மாணவிகள் சிலர், இந்த அதிபர் தங்களுக்கு வேண்டாம் என்றும் கல்வி பயில்வதற்கான சுமுகமான சூழலை ஏற்படுத்தி தருமாறு கூறி கடிதங்களை கையளித்துள்ளனர்.
அவற்றை வாங்கி படித்த பணிப்பாளர் இது தேர்தல் காலம் என்பதால், தேர்தல் முடிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சமூக பேஸ்புக்கில் அதிபருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் குரல் பதிவுகள் பகிரப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் பாடசாலையை பொறுப்பேற்றுக்கொண்டு. வேறு ஒரு பாடசாலையில் கையொப்பம் இடுவதற்கான சந்தர்ப்பத்தை தனக்கு ஏற்படுத்தி தருமாறு, கல்வி பணிப்பாளரிடம் அதிபர் ஏற்கனவே கோரியுள்ளதாகவும் அறியமுடிகிறது.
குறித்த அதிபர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைக்கொண்டு கடந்த வாரம் ஆராய்ச்சி மாநாடு நடத்தியுள்ளார் . இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து வருகை தந்திருந்தவர்களும் அதனை பாராட்டியுள்ளனர் .
ஆராய்ச்சி மாநாட்டிற்கு கட்டுரைகளை சமர்ப்பிக்காத மாணவ,மாணவிகள் சிலரை மிக மோசமான முறையில் திட்டி தீர்த்ததை அடுத்தே இவ்வாறான பதிவுகள் இடப்பட்டு அதிபருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (15) அன்று பிற்பகல் 3 மணிக்கு பாடசாலை நிர்வாகத்திற்கு எதிராக கூட்டமொன்று நடைபெற உள்ளது. இக்கூட்டம், சுமார் 10 வருடங்களுக்கு மேலாக செயல்படாமல் இருந்த பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
53 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
3 hours ago