Kogilavani / 2017 ஜூன் 14 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட நோர்வூட் சென்ஜோன் டிலரி தமிழ் வித்தியாலயத்தின், ஆசிரியர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான முரண்பாடு, சமரசம் செய்து வைக்கப்பட்டது.
அந்த பாடசாலையின் வளாகத்தில், கடந்த திங்கட்கிழமை (12) இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைப் படம்பிடிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்கள் இருவர், அப்பாடசாலையின் ஆசிரியர்களால் தாக்கப்பட்டதாக, அவ்விருவரும் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்தனர்.
இதேவேளை, பாடசாலை நேரத்தில், கல்வி நடவடிக்கையை முன்னெடுக்கவிடாது, இவ்விருவரும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், நடந்துகொண்டதாக, பாடசாலை நிர்வாகம் முறையிட்டிருந்தது.
இருதரப்பினரும், நோர்வூட் பொலிஸ் நிலையத்துக்கு நேற்று (13) அழைக்கப்பட்டிருந்தனர். ஆசிரியர்களின் சார்பில், மலையக ஆசிரியர் ஒன்றியம், ஆஜராகியிருந்தது.
எனினும், பிரச்சினையை வளர்த்துக்கொண்டு போகாமல், சமரசமாகச் செல்வதற்கு இருதரப்பமும் இணங்கியதையடுத்து, முறைப்பாடுகள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டன.
7 minute ago
14 minute ago
04 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
04 Dec 2025