2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

டெஸ்போட் சிறுவர்களைக் காணவில்லை

டி.சந்ரு   / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நானுஓயா பொலிஸ்பிரிவுக்குட்பட்ட டெஸ்போட் தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களைக் காணவில்லை என, நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

12 மற்றும் 14 வயதுகளை ​உடைய இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். விளையாட்டுப் போட்டிப் பயிற்சிகளுக்காக பாடசாலை செல்வதாக, இரண்டு சிறுவர்களும் சென்றனர் என்றும் எனினும், இதுவரைக்கும் வீடு திரும்பவில்லை என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இச்சிறுவர்களை பொதுமக்கள் கண்டால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அவர்களை ஒப்படைக்குமாறு, பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .