Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 நவம்பர் 24 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரம்பேகெம பகுதியைச் சேர்ந்த ரொஷான் திமுத்து (35) என்பவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் அவரது கள்ளக்காதலி எதிர்வரும் டிசம்பர் மாதம் (05) வரை விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரவளை பதில் நீதவான் பாலிந்த மனோஜ் வீரசிங்க உத்தரவிட்டுள்ளார்
சந்தேக நபர் மற்றும் கொலை செய்யப்பட்டவரும், தனமல்வில - ஹம்பேகமுவ, சூரியகொட பிரதேசத்தில் வசிக்கும் விதவை பெண் ஒருவருடன் தகாத உறவில் இருந்துள்ளனர்.
பலஹருவ பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய சந்தேக நபர், தனது கள்ளகாதலிக்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்தநபரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அலுத்வெல ஹமுதுருகந்த காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இவ்வாறே காட்டுக்குள் அழைத்துச்சென்று, தலையை துண்டித்துள்ளார். அவ்வாறு துண்டிக்கப்பட்ட தலையை வேறு இடத்தில் புதைத்து, உடலின் மற்ற பகுதி (கவந்தா) கால்வாய் அருகே வீசியுள்ளார்.
அத்துடன் தாக்குதலுக்கு பயன்படுத்திய மண்வெட்டியை, காட்டுக்குள் மறைத்து வைத்துள்ளார்.
இந்தநிலையில், தனது மகன் ரொஷான் திமுத்து காணாமல் போனதாக பொலிஸாரிடம் அவரது தாய் கடந்த 18ஆம் திகதி முறைப்பாடு அளித்துள்ளார்.
அதன்படிப்டையில் பொலிஸார் சந்தேகநபரின் வீட்டிற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், அவரிடமிருந்து கிடைத்த தகவலின் படி, விதவை பெண்ணொருவரிடம் தகாத உறவை பேணிவரும் தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில், கொலைச் சம்பவம் குறித்து தெரியவந்தது.
அதற்கமைய, உயிரிழந்தவரின் உடல் பாகங்கள் பிரேதப்பரிசோதனைக்காக தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, நிபுணர் சட்ட வைத்திய அதிகாரி டபிள்யூ.என்.கே.பி.விஜேதுங்க விசாரணைகளை மேற்கொண்டார்.
சந்தேகநபர்கள் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.
சுமணசிறி குணதிலக்க
5 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
52 minute ago