Editorial / 2024 நவம்பர் 04 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக உறவினர் வீட்டுக்குச் செல்லவிருந்த இரண்டு வயது பதினொரு மாத வயதுடைய ஆண் குழந்தையொன்று தனது தந்தைக்கு சொந்தமான தங்கத்தை மெருகூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரசாயன திரவத்தை (கொப்பர் அமிலம்) குடித்து உயிரிழந்துள்ளதாக கம்பளை கலஹா பொலிஸார் தெரிவித்தனர். .
கலஹா தெல்தோட்டையைச் சேர்ந்த பிரதீபன் ரத்னீஸ் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தையின் தந்தை ராஜாமணி பிரதீபன் (வயது 38) தெல்தோட்டையில் தங்க வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி அல்லிராணி (வயது 30) தனது மூன்று குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடுவதற்காக உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக மாலை ஐந்து மணியளவில் இந்த வணிக வளாகத்திற்கு வந்தார்.
அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது, அருகில் இருந்த தங்க பொருட்களை சுத்தம் செய்ய பயன்படுத்திய கொப்பர் அமிலம் சிறு குழந்தை குடித்தது. உடனே குழந்தை தரையில் விழுந்துள்ளது.
குழந்தையை தெல்தோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தெல்தோட்டை வைத்தியசாலையின் வைத்தியர்கள் குழந்தையை காப்பாற்ற கடுமையாக முயற்சித்த போதிலும், சிறிது நேரத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளது.
சடலம் பிரேதப் பரிசோதனைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், நிபுணர் சட்ட வைத்திய அதிகாரி ஆர்.பி.ஜெயசூரியவினால் வெளிப்படையான தீர்ப்பு நவம்பர் 2ஆம் திகதியன்று வழங்கப்பட்டது. பின்னர் அன்றைய தினம் உடல் டெல்தோட்டை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு மாலையில் அடக்கம் செய்யப்பட்டது.
கலஹா பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சமன் குணசேகரவின் பணிப்புரையின் பேரில் பொலிஸ் சார்ஜன்ட் ரத்நாயக்க, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டார்.
45 minute ago
56 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
56 minute ago
59 minute ago
1 hours ago