Freelancer / 2023 மார்ச் 25 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா, புடலு ஓயா கீழ் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட மூன்று பெண்களின் தங்க நகைகளை திருடிய சந்தேகத்தின் பேரில் இந்திய பெண் ஒருவர் உட்பட ஆறு பெண்களும் மூன்று ஆண்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக புடலு ஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
கோவிலுக்கு வந்த பெண் ஒருவர் அணிந்திருந்த 850,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு தங்க நெக்லஸ்கள் மற்றுமொரு பெண்ணின் கழுத்தில் இருந்த 16,57,500 ரூபாய் மதிப்புள்ள நகையும், மற்றைய பெண் அணிந்திருந்த 510,000 ரூபாய் மதிப்புள்ள தங்க நகையும் திருடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இந்தியப் பெண்ணொருவரும் இந்திய ஆணும் அடங்குவதுடன் ஏனைய சந்தேக நபர்கள் புத்தளம், திகன, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களைச் சேர்ந்த 35, 55, 47, 39, 47 மற்றும் 29 வயதுடையவர்கள்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை புடலுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R
33 minute ago
54 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
54 minute ago
1 hours ago
3 hours ago