Administrator / 2016 மே 18 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
போகாவத்தையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக தடைப்பட்டிருந்த ராவனாங்கொடைக்கும் நாவலபிட்டிக்குமான போக்குவரத்து, இன்று (18) மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.
ராவனாங்கொட பிரதான வீதியில் நேற்று (17) இரவு ஏற்பட்ட மண்சரிவு காரணமாக தலவாக்கலை மற்றும் நாவலப்பிட்டி பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் மண்மேடுகள் அகற்றப்பட்டு மீண்டும் போக்குவரத்துக்காக வீதி திறக்கப்பட்டுள்ளது என திம்புள்ள - பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனங்கள் தங்குதடையின்றி பயணிக்க கூடிய நிலை காணப்பட்டாலும் பாதையில் முகில் கூட்டம் அதிகமாக காணப்படுவதினால் வாகன போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்,; வாகனங்களை கவனமாக செலுத்துமாறு சாரதிகளை, போக்குவரத்துப் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

16 minute ago
25 minute ago
31 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
31 minute ago
42 minute ago