Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 31 , பி.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவி
கம்பளை வைத்தியசாலை நீர் தாங்கியிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் இளங்கோவனின் மரணத்தில், சந்தேகம் நிலவுவதாக அவரின் மகன் அபிநாத் தெரிவிக்கின்றார்.
பூண்டுலோயா பிரதேசத்தை சேர்ந்த குறித்த பொலிஸ் சார்ஜன்ட், கொத்மலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய நிலையில் , கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டு பின்னர் குணமாகியிருந்த சந்தரப்பத்தில் நெஞ்சுவலி காரணமாக, கடந்த மாதம் 8 திகதி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தரப்பத்தில் வைத்தியசாலைக்குள் வைத்து காணாமல்போயிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கம்பளை ,கொத்மலைமற்றும் பூண்டுலோயா பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில்,51 நாட்களில் பின்னர் கடந்த வெள்ளி கிழமை வைத்தியசாலை நீர்த்தாங்கியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
மேலும் அவரின் சடலம் உருக்குலையாமல் இருந்தமை தெரியவந்துள்ளது.இந்த நிலையில், தனது தந்தைக்கு வீட்டிலோ அல்லது தொழில் புரிந்த இடத்திலோ தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சிறிதளவேனும் பிரச்சினைகள் இருக்கவில்லை அவர் எங்களுடன் சந்தோஷமாகவே இருந்தார்.
எனவே, இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார் .
இந்த நிலையில் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக பரிசோதனைகளுக்காக சடலத்தின் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பபட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .