Nirosh / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இ.தொ.காவின் தன்னிச்சையான போராட்ட அழைப்பு பெருந்தோட்டங்களில் தேவையற்றப் முரண்பாடுகளைத் தோற்றுவிக்குமென மஸ்கெலியா பிரதேசசபை உறுப்பினர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், ''ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுத் தொடர்பில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எதிர்வரும் 5ஆம் திகதி போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ஏனைய 2 தொழிற்சங்கங்களும் இப்போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கவல்லை. எனவே இப்போராட்டத்தினூடாக இ.தொ.கா தனது தனி பலத்தைக் காட்ட முயற்சிக்கிறதா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.
கூட்டாக அழைப்பு விடுக்காமைக்கான காரணம், ஒப்பந்த தரப்புக்கள் மத்தியில் மாறுபட்ட தொகைகள் காணப்படுகின்றதா என்ற கேள்விகளும் எழுகிறது.
மேலும் தனி அமைப்புப் பலத்தைக் காட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் இதுபோன்றப் போராட்டங்களால், தொழிலாளர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. போவதில்லை. காலம் காலமாக தொழிலாளர்களின் சம்பள விடயத்தில், இ.தொ.கா அவசரபட்டு தொழிலாளர்களை வீதிக்கு இறக்கிவிட்டுவிட்டு, இறுதியாக போராட்டம் முடிவதற்கு முன்பாகவே கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு, வெற்றிப் பெற்றுவிட்டதாக மார்தட்டிக்கொள்ளும். இதுவே இ.தொ.காவின் வரலாறு.” என்றும் தெரிவித்தார்.
18 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
28 minute ago