2026 ஜனவரி 21, புதன்கிழமை

தன் முடிவைத் தானே தேடிக்கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தை

Ilango Bharathy   / 2021 ஜூலை 03 , பி.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெஞ்சர் லோவலோரன்ஸ் பிரிவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் இன்று (03) காலை பலா மரமொன்றில் தூக்கிட்ட நிலையில்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

49 வயதான குறித்த நபரின்  சட்டை பையிலிருந்து  ”எனது மரணத்தை நானாகவே தேடிக்கொண்டேன். எனது குடும்பத்தினரை யாரும் துன்புறுத்த வேண்டாம், எனது சுய சிந்தனையிலேயே இக் கடிதத்தை எழுதுகிறேன்” என்று எழுதிய கடிதமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் கடன் சுமையே தற்கொலைக்கான காரணமாக இருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X