Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஓகஸ்ட் 04 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
'நீண்ட இடைவெளிக்குப் பின்பு, யாழ்ப்பாணத்தில நடைபெறவுள்ள தேசிய தமிழ் மொழித்தின நிகழ்வுகளை, அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிகரமான ஒரு நிகழ்வாக மாற்றி அமைக்க வேண்டும். தமிழ் மொழிக்கான ஒரு விழாவாகவே இதனை நான் கருதுகின்றேன். எனவே, இந்த விழாவை சிறப்புற நடத்தி முடிப்பதற்கு, அனைவருடைய ஒத்துழைப்பும் மிகவும் அவசியம்' என, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்;ணன் தெரிவித்துள்ளார்.
இவ்விழா தொடர்பான கலந்துரையாடல், வட மாகாணக் கல்வி அமைச்சில், இன்று நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் கூறிய அவர்,
'கல்வி அமைச்சினூடாக ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் தேசிய தமிழ் மொழித்தின விழா, இந்த வருடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சும் வட மாகாண கல்வி அமைச்சும்; இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.
'எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14,15 ஆம் திகதிகளில், யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதில் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட தமிழ் மொழி தின போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் 375 பேருக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் ஜனாதிபதியால்; வழங்கி வைக்கப்படவுள்ளன.
'இதன்போது வெற்றிபெற்ற மாணவர்களின் கலை,கலாசார நிகழ்வுகளும், தமிழர் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலாசார ஊர்வலமும் இந்திய கலைஞர்களின் மேடை நிகழ்வுகளும் இந்திய இலக்கிய சொற்பொழிவாளர்கள், எமது நாட்டின் இலக்கிய சொற்பொழிவாளர்களின் சொற்பொழிவுகளும் இடம்பெறவுள்ளன' என்றார்.
கடந்த வருடம், தேசிய தமிழ் மொழித் தின விழா மலையகத்தின் தலைநகரான கண்டியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago