2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

தம்பியின் தாக்குதலில் அண்ணன் பலி

Kogilavani   / 2021 ஜனவரி 20 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

உடப்புஸ்ஸலாவ பொலிஸ் பிரிவுக்கு  உட்பட்ட மடுல்ல கல்லென்னபெத்த கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையில், நேற்று முன்தினம் (19) இரவு ஏற்பட்ட மோதலில், மூத்த சகோதரன் பொல்லால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில், ஆர்.ஜோர்ஜ் நந்தசேன (வயது 50) என்பவரே படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.

சம்பத்துடன் தொடர்புடைய இளைய சகோதரன் தலைமறைவாகியுள்ளார் என்றும் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இருவருக்கும் இடையிலான சொத்துப் பிரச்சினையே இச்சம்பவத்துக்குக் காரணம் என்றுத் தெரிவிக்கப்படுகிறது.

பிரேதப் பரிசோதனைக்காக வலப்பனை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X