2025 நவம்பர் 05, புதன்கிழமை

தேயிலை தொழிற்சாலையில் தலை சிதறி பலி

Editorial   / 2025 நவம்பர் 05 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

தேயிலை கொழுந்து அரைத்து கொண்டு இருந்த இயந்திரத்தில் விழுந்த நபர் தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மவுசாகலை தோட்ட தேயிலை தொழிற்சாலையில் புதன்கிழமை (05) அதிகாலை 2.10 க்கு இடம் பெற்றுள்ளது.

இரண்டு குழந்தைகளின் தந்தையான  கிட்ணன் விஜயகுமார் என்பவர் சம்பவத்தில் இறந்துள்ளார்.

இறந்தவரின் சடலம் மவுஸ்ஸாக்கலை தோட்ட தேயிலை தொழிற்சாலையில் சம்பவம் நடந்த இடத்தில் வைக்க பட்டு உள்ளது திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் ஹட்டன் நீதிமன்ற நீதவான் வந்து பார்த்த பின்னர் உடலம் டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் உடல் கூற்று பரிசோதனை மேற்கொள்ள பட உள்ளதாக   மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X