2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

தரிசனம் செய்ய சென்ற நபர் மரணம்

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 02 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி. பெருமாள்

சிவனொளிபாதமலைக்கு யாத்திரைச் சென்ற நபர் ஒருவர், திடீர் சுகயீனமடைந்து உயிரிழந்தள்ளார்.

கல்கிஸ்ஸ பகுதியிலிருந்து சென்ற  89 வயதான  நிஷாந்த கல்தேரா என்பவர், இன்று அதிகாலை சிவனொளிபாதமலையை  தரிசனம் செய்து விட்டு திரும்பி வரும் வழியில், ரத்து அம்பலம பகுதியில் வைத்து கடும் சுகவீனமுற்றுள்ளார்.

இதனையடுத்து  நல்லதண்ணி பொலிஸாரின் உதவியுடன்,  1990 அம்பூலன்ஸ் மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .