Editorial / 2020 மே 05 , பி.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
கொவிட்-19 பாதிப்பு காரணமாக, பிற மாவட்டங்களில் இருந்து மலையகத்துக்கு திரும்புபவர்களின் வாழ்வாதாரத்துக்காக, தரிசு நிலங்களைப் பகிர்ந்தளிப்பது என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு, அரசாங்கம் விளக்கம் அளிக்கவேண்டும் என, சட்டத்தரணியும் மலையக மக்கள் முன்னணியின் பிரதி பொதுச் செயலாளருமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழ்மிரருக்கு இன்று (05) கருத்துத் தெரிவித்த அவர்,
இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
பெருந்தோட்டத்துறையிலுள்ள தொழிலாளர்களுக்கான சம்பளத்தை உயர்த்திக்கொடுப்பதற்கே, தற்போது பல பிரச்சினைகள் காணப்பட்டு வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தெளிவுபடுத்தப்படல் வேண்டும் என்று அவர் கூறினார்.
பெருந்தோட்டத் துறையிலுள்ள அனைத்து நிலங்களும் கம்பனிகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்குக் குத்தகைக்கு விடப்பட்டிருந்தாலும், காட்டுப் பகுதிகளாக இனங்காணப்பட்டாலும், தரிசு நிலங்களாக இருந்தாலும், அதை பகிர்ந்தளிப்பதற்கு, தோட்ட நிர்வாகம் அல்லது கம்பனி எந்த அடிப்படையில் இணக்கம் வெளியிட்டுள்ளது என்பதை தெளிவு படுத்தவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு சம்மதம் தெரிவிக்காவிட்டால், தொழிற்சங்கங்களின் அடுத்த நடவடிக்கை என்ன என்பதையும் இதில், அரசாங்கம் எவ்வாறு தலையிடு செய்து, காணிகளைப் பிரித்துக்கொடுக்கவுள்ளது போன்ற பல பிரச்சினைகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு ஏற்கெனவே வழங்கப்பட்ட தரிசு நிலங்களில் விவசாயத்தை மேற்கொண்ட இளைஞர்கள், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் தனக்குத் தெரியும் என்றும் பல ஆசைகளைக் காட்டி ஏமாற்றப்பட்டதாலேயே, தொழிலாளர்கள் இன்று தொழிற்சங்கங்கள் மீது அதிருப்தியில் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளில் கைத்தொழில்களை ஆரம்பிப்பது தொடர்பான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதை தான் அறிந்துள்ளதாகவும் அங்கு எந்த வகையான உற்பத்திகளை எந்த முதலீட்டின் அடிப்படையில் முன்னெடுக்கவுள்ளனர் என்பது தொடர்பாக தெளிவுபடுத்தவேண்டும் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இவ்வாறான பல கேள்விகளுக்கு விடை கிடைக்காவிட்டால், இறுதியில் ஏமாற்றம் மாத்திரமே மிஞ்சும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago