Kogilavani / 2021 ஜனவரி 17 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேன் செனவிரத்ன
கண்டி ஸ்ரீ தலதாமாளிகையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த 21 பொலிஸ் அதிகாரிகளுக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, தலதாமாளிகை மூடப்பட்டு கிருமிதொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
தலதாமாளிகை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, அவர்களுடன் தொடர்பைப் பேணிய 153 பொலிஸ் அதிகாரிகளுக்கு, பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
பிசிஆர் முடிவுகள் நேற்று முன்தினம் (16) வெளியானபோதே, 21 பொலிஸ் அதிகாரிகளுக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இதனையடுத்து, தலதாமாளிகை பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ள 231 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்களுக்குப் பதிலாக வெளிப் பிரதேசங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களிலிருந்து 189 பொலிஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் கண்டி பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி சுதத் மாசிங்க தெரிவித்தார்.
24 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
3 hours ago