2025 ஜூலை 14, திங்கட்கிழமை

தலவாக்கலையில் ATM இயங்கவில்லை

Janu   / 2025 ஜூலை 14 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை இலங்கை வங்கி கிளையில் உள்ள 3 தன்னியக்க பொறி இயந்திரங்களும் இயங்கவில்லை எனவும் இவ்வங்கிக்கு அதிக எண்ணிக்கையான வாடிக்கையாளர்கள் இருக்கின்ற நிலையில், இக்கிளையிலுள்ள ATM  CDM  இயந்திரங்கள் மூன்றும் ஞாயிற்றுக்கிழமை (13)  மாலை முதல் இயங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இப்பிரச்சினை அடிக்கடி இங்கு நிலவுகின்ற போதிலும் வங்கி முகாமை இதற்கான நிரந்தர தீர்வை எடுக்கவில்லை  எனவும் ஒரு நாள் மட்டுமல்லாது தொடர்ச்சியான இப் பிரச்சினை  காரணமாக வாடிக்கையாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

1975 என்ற இலங்கை வங்கியின் துரித அழைப்பு சேவைக்கு வாடிக்கையாளர்கள் பலரும் அழைப்பினை ஏற்படுத்தி இந்த பிரச்சனை தொடர்பாக கூறிய போது அதற்கு அவர்கள் தற்போது எதுவும் செய்ய முடியாது என்றும் வார இறுதி நாட்கள் என்ற காரணத்தினால் குறித்த இயந்திரங்களை இயக்குவதில் பல்வேறு சிரமங்கள் காணப்படுவதாகவும் கடமை நாட்களில் மாத்திரமே அதை இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் வாடிக்கையாளர்களின் அவசர கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு என்ன செய்வது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

மேலும்,அவசர தேவைகளுக்காக இலங்கை வங்கி கிளைக்கு வந்த பலரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.  

சுஜிதா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .