2026 மே 09, சனிக்கிழமை

dd

தலவாக்கலையில் இரு குழுக்கிடையில் மோதல்; ஆறு பேர் கைது

Editorial   / 2019 மே 07 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கௌசல்யா

தலவாக்கலை நகரில், நேற்று  (06) இரவு எட்டு மணியளவில், இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில், ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று, தலவாக்கலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்தப் பிரதேசத்தில், ஓட்டோவொன்று நபர் ஒருவரை மோதியச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே, இந்தக் குழு மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.

மோதல் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், ஆறு பேரை கைதுசெய்ததுடன், ஏனையவர்களை அவ்விடத்திலிருந்து விலகிச் செல்லமாறு எச்சரித்தனர்.

மூன்று தமிழ் இளைஞர்களும் மூன்று சிங்கள இளைஞர்களுமே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .