2026 மே 09, சனிக்கிழமை

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய முன்னாள் அதிபரைக் காணவில்லை

சுஜிதா   / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டக்கலை - ஜெயராஜ் மாவத்தையில் வசித்து வந்த 72 வயதுடைய திரு.கந்தசாமி துரைராஜ் என்பவர், கடந்த 20​ஆம் திகதியில் இருந்து காணாமல்  போயுள்ளார் என்று பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர், தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் என்றும்  இலங்கை கல்வி சேவையிலிருந்து ஓய்வு பெற்று, கொட்டகலையில் தனது குடும்பத்தாருடன் வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

5.5 அடி உயரமும் மாநிறத் தோற்றமும் கொண்ட இவர், ஆங்கிலேயரைப் போன்று தோற்றத்திலும் பேச்சிலும் காணப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் காணாமல் போனமை தொடர்பாக, கடந்த 21ஆம் திகதி, பத்​தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படடுள்ளது என்றும் இவர் குறித்து தகவல் அறிந்தால், பத்தனை பொலிஸ் நிலையத்துக்கோ  அல்லது 0777067325/ 0770501988 ஆகிய அலைபேசி இலக்கங்களுக்கோ அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறு, பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .