2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தலை கல்லில் அடிப்பட்டு மூதாட்டி சம்பவ இடத்திலேயே மரணம்

Freelancer   / 2023 ஜூன் 25 , பி.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ். டி.சந்ரு.

நானு ஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பங்களாவத்தை பகுதியில் விவசாய காணியில் தொழிலுக்காக சென்ற (70)வயதான தாய் ஒருவர் இன்று மாலை சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக நானு ஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் நானு ஓயா எடின்பரோ தோட்டத்தை சேர்ந்த வேலுசாமி காளியம்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் தனது நாளாந்த வாழ்வாதாரத்திற்காக பங்களாவத்தை பகுதியில் தனியார் ஒருவரின் விவசாய காணியில் தின சம்பளத்திற்கு களை பிடுங்க சென்றுள்ளார்.

இந்த நிலையில் விவசாய காணியில் பயிர்களுக்கிடையில் இருந்து அகற்றிய களைகளை வீசுவதற்கு சென்ற போது சுமார் இருபது அடி உயரமான மண்மேட்டில் இருந்து காலிடறி வழுக்கி விழுந்துள்ளார்.

இதன்போது தலை பிரதான வீதியின் கொங்கிரீட் கல்லில் அடிப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த தாயின் சடலம் நுவரெலியா மாவட்ட நீதவானின் மரண விசாரணையை தொடர்ந்து பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானு ஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X