டி. ஷங்கீதன் / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்தின் அறிவித்தலையும் மீறியே வங்கிகள் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ஆசிரியர்கள், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையைக் கருத்திற்கொண்டு, வங்கிகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகைக்கான தவணைப் பணத்தை, மூன்று மாதங்களுக்கு அறவிட வேண்டாம் என அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், அந்த அறிவித்தலையும் மீறி, இம்மாதத்துக்கான தவணைப் பணத்தை, வங்கிகள் அறவிட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பாக, குறிப்பிட்ட வங்கிகளுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, தங்களுக்கு அவ்வாறான எந்த அறிவித்தலும் வரவில்லை எனவும் எனவே, அதனை நடைமுறைப்படுத்த முடியாது எனவும் அதிகாரிகள் பதிலளித்தாக, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக, அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகைக்கான தவணைப் பணத்தை, மீண்டும் தங்களுடைய கணக்கில் வைப்பிலிடுவதற்கு, அரசாங்கம் விசேட அறிவித்தலை விடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .