2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

தாக்குதலில் பெண் பலி

Kogilavani   / 2017 ஜூன் 27 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

கதிர்காமம் நகர், பிரதான் பாலத்துக்கு அருகில், பெண்கள் மூவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக, கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்றுக் காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், கதிர்காமத்தைச் சேர்ந்த கந்தசாமி பச்சையம்மா (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடும்பத்தகராரே இச்சம்பவத்துக்கு காரணமென ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம், பிரேத பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .