Editorial / 2025 ஜனவரி 14 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு பெண்ணின் தலையில் துப்பாக்கியை வைத்து 18 வயது சிறுமியை கடத்திச் சென்ற பின்னர், அவரது காதலன் உட்பட இரண்டு பேர் 13ஆம் திகதி திங்கட்கிழமை 12 துளை துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டதாக தெரணியகல பொலிஸார் தெரிவித்தனர்.
தெரணியகல, தெலொலுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்தே இவ்வாறு அச்சுறுத்தி சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 17 மற்றும் 19 வயதுடைய இருவர், தெஹியோவிட்ட, மணிக்கந்த மற்றும் கடங்கம பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
தனது 18 வயது மகள் ஞாயிற்றுக்கிழமை (12) இரவு கடத்தப்பட்டதாகக் கூறி, இளம் பெண்ணின் தாயார் தெரணியகல பொலிஸில் செய்த புகாரைத் தொடர்ந்து, பொலிஸ் விசாரணைகள் தொடங்கப்பட்டன.
அதன்படி, கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இளம் பெண்ணும் சந்தேக நபரும் சிறிது காலமாக காதல் உறவில் இருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
சிறுமியின் தாயார் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் இந்த உறவை தொடர்ந்து எதிர்த்து வந்ததாகவும், பின்னர் தாய் சிறுமியை அத்தனகல்ல பகுதியில் உள்ள ஒரு உறவினர் வீட்டில் பல நாட்கள் தங்க வைத்து, பின்னர் 12 ஆம் திதி தெரணியகலவில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்ததாகவும் தெரியவந்துள்ளது. .
அந்த இளம் பெண் தனது தாயாருடன் பேருந்தில் தெரணியகலவில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, சந்தேக நபருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது என்றும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025