Editorial / 2024 டிசெம்பர் 23 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை மாணவர்கள் நால்வரை கைது செய்த தெல்தெனிய பொலிஸார், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவர்களிடம் 5000 ரூபாய் மதிக்கத்தக்க 57 போலி நாணய தாள்களை கைப்பற்றியுள்ளனர்.
திகன பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெல்தெனிய பொலிஸாருக்கு அறிவித்ததன் பிரகாரம் குறித்த மாணவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நான்கு மாணவர்களும் திகன பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு வந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட 5000 ரூபாய் நாணயத்தாள் போலியானது என உணர்ந்த வர்த்தகர் இது தொடர்பில் தெல்தெனிய பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் 15-16 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாணவர்களிடம் நடத்திய விசாரணையில், தெரிந்த மாமா ஒருவர் பொருட்களை வாங்க இந்த நோட்டுகளை கொடுத்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago