Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 நவம்பர் 16 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திகனை நகரில் பணம் வட்டிக்கு வழங்கப்படும் நிறுவனம் ஒன்றை நடத்திச் சென்ற நபர் ஒருவர், இன்று (16) பகல் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.
கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 55 வயதான தொன் ரங்கஜீவ மங்கள குணவர்தன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் வட்டிக்கு பணம் கொடுப்பதற்கு மேலதிகமாக வாகனங்களை வாடகைக்கு விடும் வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளார். அத்துடன் பல முகவர் நிலையங்களையும் நடத்திச் சென்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திகனை நகரிலுள்ள பல கட்டடங்கள் இவருக்குச் சொந்தமானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபருக்கு அருகிலிருந்து துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இது தற்கொலையா அல்லது எவரேனும் துப்பாக்கிச் சூடு நடத்தினரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
7 minute ago
9 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
9 hours ago
15 Aug 2025