2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

’திகா மன்றம்’ அங்குரார்ப்பணம்

Editorial   / 2017 செப்டெம்பர் 13 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன் 

மலையகத்தில் நிலவுகின்ற குறைபாடுகள், ஏற்றத் தாழ்வுகள் முதலானவற்றை அகற்றி, சமூகத்தில் பலம் மிக்க அமைப்பொன்றை கட்டியெழுப்பும் நோக்கத்தில், “திகா மன்றம்” எனும் புதிய அமைப்பொன்று, “ஒரு புதிய மாற்றத்துக்கான ஆரம்பம்” என்ற தொனிப்பொருளில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. 

இதற்கமைய, ஹட்டன் டி.கே.டபுள்யூ கலாசார மண்டபத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி காலை 10 மணிக்கு, தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவரும், அமைச்சருமான  பி. திகாம்பரத்தின் இணைப்புச் செயலாளரும், அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவருமான ஜீ. நகுலேஸ்வரன் தலைமையில், இந்நிகழ்வு இடம்பெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .