2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

திடீர் சோதனை நடவடிக்கை

Janu   / 2024 பெப்ரவரி 04 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் சட்ட நடவடிக்கையுடன் இணைந்து நுவரெலியா மாநகர சபைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு அருகில் உள்ள அனைத்து கடைகளையும் கடுமையாக சோதனையிடுவதற்கு நுவரெலியா பொலிஸார்  நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாடசாலைகள்  ஆரம்பிக்கும் முன்னர் போதைப்பொருள்களின்  அச்சுறுத்தலில் இருந்து பாடசாலை மாணவர்களை  பாதுகாக்கும் நோக்கில் இந்த விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நுவரெலியா பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த ஹக்மான மற்றும் பிரதி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் ஜயசுந்தர ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், பிரதம பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சியின் பணிப்புரைக்கமைய நுவரெலியா பொலிஸார் இந்த விசேட சோதனை  நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

 பி.கேதீஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X