Janu / 2026 பெப்ரவரி 16 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொனராகலை, புத்தள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தள - மொனராகலை வீதியின் நாமண்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் அறையில் ஞாயிற்றுக்கிழமை(15) ஏற்பட்ட தீப்பரவலால் தந்தை, தாய் மற்றும் மூன்று வயதுடைய பெண் குழந்தை ஆகிய மூவரும் பலத்த காயமடைந்துள்ளதாக புத்தள பொலிஸார் தெரிவித்தனர்.
29 வயதுடைய ஜே.எம். திலுக்ச மதுசங்க , 26 வயதுடைய கே.டி. சுராஜி சகுந்தலா மற்றும் 3 வயதுடைய ஜே.எம். ஓனல்யா ஆகிய மூவரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மூவரும் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தாய் மற்றும் மகளின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த வீடு எவ்வாறு தீப்பற்றியது என்பது இதுவரை கண்டறியப்படாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சுமனசிறி குணதிலக்க
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago