செ.தி.பெருமாள் / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை நகரசபைக்கு அண்மித்த கலுகல்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள திண்மக் கழிவுகள் சேகரிக்கும் நிலையத்தால், பொதுமக்கள் சௌகரியத்துக்கு முகங்கொடுத்து வருவதாக, ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவுக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, குறித்த பகுதிக்கு, ஆளுநரும் ஆளுநர் அலுவலக அதிகாரிகளும் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, குறித்த பகுதியில் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகள், வேறுபடுத்தி சேகரிக்கப்பட்டிருந்த போதிலுமு், குரங்குகளாலும் நாய்களாலும், அவை குடியிறுப்புப் பகுதிக்கு கொண்டு வந்து போடப்படுவதாக, பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டின்.
இதனால், சூழல் மாசடைவதாகவும் நுளம்பு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த நிலையத்தை, குடியிருப்பு அல்லாத இடத்தில் மாற்றியமைக்குமாறு ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ண உத்தரவு பிறப்பித்தார்.
32 minute ago
44 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
44 minute ago
2 hours ago
3 hours ago