Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
R.Maheshwary / 2022 ஜூலை 12 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
எரிபொருள் பிரச்சினைகள் திருமண நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்களும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதற்கமைய, பதுளை நகரிலுள்ள திருமண மண்டபத்தை திருமணத்துக்காக முன்பதிவு செய்த நபர் ஒருவர் நெருக்கடியொன்று முகங்கொடுத்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
பதுளை நகரிலிருந்து 10 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், தனது மகளின் திருமணத்தை மண்டபம் ஒன்றில் விமர்சையாக நடத்த எண்ணியிருந்தார்.
குறித்த மண்டபத்துக்கு 3 இலட்சம் ரூபாய் செலவானாலும் பராவாயில்லை. முழு ஊருக்கும் சொல்லி திரமணத்தை செய்ய திட்டமிட்டிருந்தார்.
இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு கடந்த 9ஆம் திகதி திருமணம் நடைபெற்ற போது, அழைப்பிதழ் விடுத்த எவரும் திருமணத்துக்கு வருகைத் தந்திருக்கவில்லை.
எரிபொருள் பிரச்சினை காரணமாக அழைப்பிதழ் விடுத்த எவரும் திருமணத்துக்கு சென்றருக்கவில்லை.
சமைத்த உணவுகள் அனைத்தும் வீணாகின. இறுதியில் மண்டபம், உணவுக்கான பணத்தை எவ்வாறு செலுத்தப்போவது என அறியாமல், குறித்த நபர் மண்டப உரிமையாளரிடம் அழுது புலம்பியுள்ளார்.
இதனையடுத்து குறித்த மண்டப உரிமையாளர், உங்களுக்கு 6 மாதம் கால அவகாசம் தருகிறோம். அதற்கிடையில் கட்டணங்களை செலுத்தி விடுங்கள் என தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .