R.Maheshwary / 2023 பெப்ரவரி 26 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
அலவத்துகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்கும்பர- அலவத்துகொட வீதியில் எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் ஒருவர், மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக தொழில் செய்து வந்த கண்டி- மாவில்மட பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் வியாழக்கிழமை(23) இரவு 7.30 மணியளவில் அங்கும்பர வீதியில் தனது மோட்டா சைக்கிளில் அமர்ந்திருந்ததை வீதியில் சென்ற ஒருவர் கண்ட சில நிமிடங்களில், இவர் எரிகாயங்களுடன் மீட்கப்பட்டதாக அலவத்துகொட பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞர் தனது மோட்டார் சைக்கிளிலுள்ள எரிபொருளைப் பயன்படுத்தி தனக்கு தானே தீமூட்டியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தனர்.

19 minute ago
37 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
37 minute ago
5 hours ago